புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (12:32 IST)

சனிக்கிழமையானாலே கல்லா கட்டும் டாஸ்மாக்; இந்த வார நிலவரம்!

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாதிப்புகளை குறைக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து மாவட்டங்களிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இவ்வாறான முழுமுடக்கம் செயல்பட்டு வரும் நிலையில் மதுப்பிரியர்கள் ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமை அன்றே மறுநாளுக்கும் தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்கிறார்கள்.

இதனால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.40.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. சென்னையில் 20 கோடியே 82 லட்ச ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.