திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (13:41 IST)

காங்கிரஸ் கட்சியில் இணையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி: அண்ணாமலைக்கு போட்டியா?

சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும், அவர் இணைந்த ஒரு சில நாட்களில் அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி தரப்பட்டது என்பதும் தெரிந்ததே மேலும் அவருக்கு விரைவில் ராஜ்யசபா எம்பி பதவியும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சகாயம் ஐஏஎஸ் அவர்களும் ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவரும் விரைவில் அரசியலில் குதிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் என்பவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். காங்கிரஸ் வேற்றுமையை வலியுறுத்தவில்லை என்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் சசிகாந்த் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் 
 
ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ச்சியாக அரசியல் பக்கம் வந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது