திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (16:45 IST)

சசிகலாவை நீக்க முடிவு?: ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடுகிறது அதிமுக முக்கிய தலைகள்!

சசிகலாவை நீக்க முடிவு?: ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடுகிறது அதிமுக முக்கிய தலைகள்!

எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்தபோது விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவோம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


 
 
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டும் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் உள்ளபோது பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என கூறப்படுகிறது.
 
அதன்படி ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதிமுகவை பொறுத்துவரை பொதுச்செயலாளருக்கே உச்ச அதிகாரம் உண்டு. எனவே அதனை வைத்து ஆட்டம் போடும் சசிகலா, தினகரன் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவை எடுத்துள்ளனர்.