Daily Horoscope
✕

ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவா? சசிகலா பேட்டி..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 24 மார்ச் 2023 (11:33 IST)
சட்டமன்றத்தில் ஏற்படும் மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்று கூற முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை வரவேற்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சசிகலா சட்டமன்றத்தில் மக்களுக்காக மக்களின் பிரச்சனைக்காக எந்த தீர்மானம் வந்தாலும் அதை மக்களின் பிரதிநிதிகள் தாராளமாக பேசலாம், அவர் பேசக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வாறு நான் சொல்வதால் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார்
 
மேலும் ஓ பன்னீர் செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் நாங்கள் அதிமுகவில் உள்ள யாரையும் வித்தியாசம் பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார். 
அதிமுகவில் உள்ள எல்லோரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை வீழ்த்தி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

எதிரிக்கு எதிரி நண்பன்.. விஜய்யை எதிர்க்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக...

பிரபாகரன் வீட்டிற்கு சென்ற திருமாவளவன்.. பாஜக கண்டனம்.. காங்கிரஸ் மெளனம்....

அடுத்த கட்டுரையில்
Show comments