வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:32 IST)

வி.கே.சசிகலா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்: எந்த பல்கலைக்கழகம் தெரியுமா மக்களே?

வி.கே.சசிகலா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்: எந்த பல்கலைக்கழகம் தெரியுமா மக்களே?

தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ளார். நேற்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சியின் தலைவராக சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.


 
 
இந்நிலையில் புதிய முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளது குறித்து தொலைக்காட்சி சேனல்கள் நேற்று விவாதங்கள் நடத்தியது. தமிழகம் முழுவதும் இது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.
 
இந்நிலையில் சசிகலா ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் போன்ற திறமையை கொண்டவர் என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். பிரபல தனியார் செய்தி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கூடவே 33 ஆண்டுகள் இருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுடன் சில மணி நேரங்கள் இருந்தாலே பல விஷயங்களை. ஆனால் எப்பொழுதும் ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலா ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் போன்ற திறமையுடைவர் என சி.ஆர்.சரஸ்வதி அந்த நிகழ்ச்சியில் கூறினார்.