செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (09:38 IST)

ஆத்திரத்தில் தான் ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்தார்: விளாசும் ஸ்டாலின்!

ஆத்திரத்தில் தான் ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்தார்: விளாசும் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் முதல்வராக முடியாத ஆத்திரத்தில் தான் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்தார் என கூறினார்.


 
 
சசிகலா ஜெயலலிதா சமாதியில் கையால் மூன்று முறை அறைந்து சபதம் எடுத்துக்கொண்டது குறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின் படி அவரும் சிறைக்கு சென்றிருக்க வேண்டும்.
 
இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க சென்ற கோபத்தின் விளிம்பில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரே ஒரு நாள் முதல்வராக இருந்த பின்னர் ஜெயிலுக்கு சென்றிருந்தால் அவருக்கு ஜெயிலில் முதல்வகுப்பு கிடைத்திருக்கும்.
 
ஆனால் பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த தீர்ப்பு வெளியானது. அதனால் அப்படி பதவியேற்க முடியாத ஆத்திரத்தில் ஜெயலலிதா சமதியில் அவர் மூன்று முறை ஓங்கி அடித்திருக்கலாம் என்றார் ஸ்டாலின்.