திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (16:24 IST)

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கு: சசிகலா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக சசிகலா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த வழக்கில் அவர் மீது தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா மீது மீதான வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது
 
இந்த சிறை தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பல்வேறு வசதிகளை பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது
 
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த வழக்கின் விசாரணையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது