செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2024 (15:03 IST)

போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்கள் கைது.. திருமண மண்டபத்தில் தங்கவைப்பு..!

போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களின் ஐடி கார்டு கொண்டு அடையாளம் வைத்து கைது செய்யப்படுவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராட்டம் செய்து வரும் நிலையில் போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் சிஐடியு சங்கம் வைக்க மட்டும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிஐடியு சங்கம் வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி போலீசார் கைது செய்து வருவதாகவும், சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் ஜங்ஷன்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ், ஐடி கார்டுகளை சோதனை செய்து சாம்சங் ஊழியர்களை போலீசார் கைது செய்வதாகவும், கைது செய்யப்படும் சாம்சங் ஊழியர்கள், தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva