திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (17:02 IST)

2022 -ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

sakithya academy
2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின்  பால சாகித்ய புரஸ்கார்,யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா பிராந்திய மொழிகளுக்காக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார்,யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்த கவிதை, கட்டுரை, மற்றும் சிறுகதைகளுக்கான விருதுகள் அறிவிக்கபப்ட்டுள்ளது.

தமிழில் சிறுவர் இலக்கத்திற்கான பால சாகித்ய புரஸ்கா விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு  ,மல்லிகாவின் வீடு, என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருது,  ப, காளிமுத்துக்கு , ''தனித்திருக்கும் அரளிகளின் மதியம்'' என்ற நூலிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும்  நவம்பர் மாதம் 14 ஆம் தேதி நடக்கும் விழாவில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ் இலக்கிய எழுத்ததாளர்கள், ஆளுமைககள், வாசகர்கள் விருதாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.