திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (00:39 IST)

கமலுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தலைவியை கலாய்த்த எஸ்.வி.சேகர்

ஒரு கட்சியின் தலைவரை அந்த கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரே கலாய்ப்பது போன்ற காமெடி நிச்சயம் பாஜகவை தவிர வேறு எந்த கட்சியிலும் நடக்காது.



 
 
கமல்ஹாசனின் அரசியல் அறிக்கைகள் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், எந்த சேவையும் செய்யாமல் கமல் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்த கருத்துக்கு கலாய்க்கும் வகையில் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில், 'எங்க அக்கா சேவையை இந்த ஊரே பாராட்டிச்சே. என்னசேவை  பண்ணினாங்க?  புளிசேவை, லெமன் சேவை,தேங்காய் சேவை. வந்து சாப்டு பாரேன். அப்படி சமைப்பாங்கோ' என்று கூறியுள்ளார்.
 
எஸ்.வி.சேகரின் இந்த காமெடிக்கு டுவிட்டர் பயனாளிகள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கமல்ஹாசனுக்கு சக நடிகர் என்ற முறையில் எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.