திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:20 IST)

மாநிலங்களுக்கான வரி பங்கீடான ரூ.72 000 கோடி விடுவிடுப்பு- மத்திய அரசு

மாநிலங்களுக்கான வரி பங்கீடான ரூ.72 000 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், மா நில அரசுகளுக்கு விடுவிக்க வேண்டிய வரி பங்கீடான ரூ.72 ஆயிரம் கோடியை இன்று விடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக  முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தரபிரதேச  மாநில அரசிற்கு, ரூ.13, 088 கோடியும்,  நிதிஸ்குமார் தலைமையிலான பீகார் மாநிலத்திற்கு ரூ.7338 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ. 5727 கோடியும் விடுவித்துள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டிற்கு ரூ.2796 கோடி விடுத்துள்ளது.