செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (13:11 IST)

மகளிர் உரிமைத்தொகை: சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான  சிறப்பு முகாம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது 
 
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி என அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ள தாகவும், மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran