வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 5 ஜூன் 2021 (16:34 IST)

குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ....கனிமொழி எம்.பி வழங்கினார் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு  தலா.ரூ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த விசாரணை கமிஷனின் இடைக்கால அறிக்கை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கு பணிநியமனம் செய்யப்படும் என ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில்  அவரே முதல்வராக ஆகியுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு சமீபத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார்

மேலும் தீவிர காயமடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பணி நியமனம் பெற்ற அனைவரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 94 குடும்பங்களுக்கு  தலா.ரூ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண உதவியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி வழங்கினார்.