Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையில் "கொடிகட்டி" பறந்த காவலர் கைது

கொள்ளையில் "கொடிகட்டி" பறந்த காவலர் கைது

Written By K.N.Vadivel
Updated: வெள்ளி, 17 ஜூன் 2016 (11:37 IST)
தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற காவலரை பொது மக்கள் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
 

 
தூத்துக்குடி, எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த சுடலைமணி பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலினிசெல்வமும் ஆசிரியராக உள்ளார்.
 
நேற்று, இவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு  சென்ற நிலையில், அவர்களது வீட்டை உடைத்து உள்ளே செல்ல இருவர் முயன்றுள்ளனர்.
 
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே, அவர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 
போலீஸ் விசாரணையில், இருவரில் ஒருவர் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராமநாதன் என தெரிய வந்தது.
 
மற்றொருவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்(30) என தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
கொள்ளை வழக்கில் போலீசார் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments