Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐ.ஓ.பி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை

Updated: திங்கள், 26 மார்ச் 2018 (12:17 IST)
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி வங்கி கிளையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை விருகம்பாக்கம் பங்கியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 24 மற்றும் 25ம் தேதி ஆகிய நாட்களும் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
 
அந்நிலையில், இதனைப் பயன்படுத்தி இந்த வங்கியில் உள்ள 2 லாக்கரை உடைத்து ரூ.32 லட்சம் பணத்தை சிலர் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த 132 பைகளில் உள்ள தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
 
இதனையடுத்து வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  குறிப்பாக, தினமும் பணிக்கு வரும் ஒரு காவலாளி இன்று வரவில்லை. எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பள்ளியை ஆய்வு செய்ய வந்த காக்ரோச் ஜனதா கட்சியினர்.. அடித்து துரத்திய பொதுமக்கள்.. ஜெய்ப்பூரில் பரபரப்பு..

வரலட்சுமி நோன்பு அன்று உயர்ந்த தங்கத்தின் விலை!.. இன்றைய நிலவரம்..

3 சொந்த வீடு இருக்கு!.. ஏன் அரசு பங்களாவில் இருக்கிங்க!.. உதயநிதியிடம் ஆதவ் அர்ஜுனா கேள்வி..

3 மணி நேரம் பாத்ரூமில் இருந்த எதிர்கட்சி தலைவர்னு சொல்லவா!.. சட்டசபையில் நிர்மல்குமார் Vs உதயநிதி மோதல்!..

சென்னை கடற்கரை - தாம்பரம்.. இரவில் இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து.. ரயில்வே நிர்வாகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments