படுக்கைக்கு அழைத்த பணக்காரர்கள் - நடிகை கஸ்தூரி ஓபன் டாக்
பணக்காரர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் என நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், என்னிடம் கேட்ட விஷயங்கள் கிடைக்கவில்லை என்றதும், என்னை சில படங்களிலிருந்து தூக்கி விட்டனர். தற்போது அரசியல்வாதியாக உள்ள ஒரு நடிகர், என்னிடம் கேட்ட ஒரு விஷயத்திற்கு நான் முடியாது எனக் கூறிவிட்டேன். உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார்” என கஸ்தூரி கூறியிருந்தார்.
எனவே, கஸ்தூரியை அந்த நடிகர் படுக்கைக்கு அழைத்தார். ஆனால் கஸ்தூரி மறுத்துவிட்டார் என பெரும்பாலான ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அதற்கு கஸ்தூரி மறுப்பு தெரிவித்தார். நான் மகளிர் தினத்திற்காக நான் கொடுத்த பேட்டி அது. ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி போல் எதுவும் நடக்கவில்லை. வியாபாரத்திற்காக சில இணையதளங்களில் இப்படி செய்தி வெளியிட்டுள்ளனர் என கூறினார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல வார இதழான விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் “ அட்ஜஸ்ட்மெண்ட் என்பது இரண்டு பேர் விரும்பி ஈடுபடும் ஒரு செயல். அதுஅவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் யாரும் கருத்துக் கூற முடியாது. சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க விவகாரங்களை பற்றி தெரிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. நடிகைகளும் பெண்கள்தான். அவர்களுக்கும் மனது, குடும்பம் உள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணாத நடிகைகள் எல்லால் இங்கே கொண்டாடப்படுகிறார்களா என்ன?...
நடிகைகளை நடிகையாக மட்டுமே பார்க்க வேண்டும். நடிகைகள் மீது வக்கிரமான பார்வை இங்கே இருக்கிறது. அது சகித்துக் கொண்டுதான் நடிகைகள் வாழ வேண்டியிருக்கிறது. முக்கிய பணக்காரர்கள் நடிகைகளை மோசமாகவே பார்க்கிறார்கள். அப்படி சிலர் என்னை நெருங்க முயற்சி செய்தார்கள். நான் அப்படிப்பட்ட பெண் இல்லை.. என்னை மன்னித்து விடுங்கள் என கூறிவிட்டேன். அட்ஜஸ்ட் செய்யாததால் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன். நெருக்கடிகளையும் சந்தித்துள்ளேன்.
சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்ல.. சாதாராணப் பெண்ணுக்கும் இந்த சமூகத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகளை பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை வாரி இறைத்து விடுகிறார்கள். இதில் ஒரு பகுதிதான் பத்திரிக்கைகளில் வரும் கிசுகிசுக்கள்.
யாரிடமும் நற்சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்களுக்கும் குடும்பம் இருப்பதை வதந்தி பரப்புகிறவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இதையெல்லாம தாண்டி ஒரு பெண் சாதிப்பதே இங்கு சாதனையாக இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.