தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!
தமிழக சட்டமன்றத்தில் இன்று கச்சத்தீவு குறித்த தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், இதற்கான நிரந்தர தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும். இதற்காக இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்து, கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் பேசினர். அதை ஆதரித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்தார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட நாள் முதலே, கச்சத்தீவு ஒப்பந்தம் தவறு என்று பாஜக கூறி வருவதாகவும், இந்த வரலாற்று தவற்றை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
Edited by Mahendran