திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:18 IST)

#ReleasePerarivalan - தேசிய அளவில் டிரெண்டாக்கிவிட்ட நெட்டிசன்கள்!!

சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேகையும் பலர் ஷேர் செய்து வருகின்றனர். 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் எந்த இடையூறும் இல்லை என உச்சநீதிமன்ற கூறிய பிறகும் ஆளுனர் இது தொடர்பான ஒப்புதல் வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் கட்சிகள் அவரை விடுதலை செய்ய ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பல ஆண்டு காலமாக நீதிக்காக காத்திருக்கும் அவரை இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுனரிடம் தமிழக முதல்வர் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்த விஷயத்தை கவனிக்கும் படி சமூக வலைதளங்களில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேகையும் பலர் ஷேர் செய்து வருகின்றனர். இப்படி இதனை பல பதிவிட்டு இந்த ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.