1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anandakumar
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:15 IST)

வாட்ஸ் அப் பேஸ்புக்கில் காலத்தினை செலவழிக்கும் மாணவிகளுக்கு புத்துணர்வு போட்டிகள்

கரூர் அடுத்த புன்னஞ்சத்திரம் அன்னை மகளிர் கலைக்கல்லூரியில் தமிழகத்தின் பண்டைய கால பெண்களின் விளையாட்டினை பறைசாட்டும் வகையில் பல்லாங்குழி, தாயவிளையாட்டு, டயர் உருட்டி விளையாடுதல், கற்களை கீழே விட்டு விட்டு அதில் ஒரு கல்லை மட்டும் உயர்த்தி அஞ்சாங்கல் என்கின்ற விளையாட்டு, ஆடுபுலி ஆட்டம், கயிறுதாண்டுதல் (ஸ்கிப்பிங்), குழையாய் குழையாய் கத்திரிக்காய், கிட்டிப்புல், பச்சைக்குதிரை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. 
அதாவது பல்வேறு மாணவிகள் இன்றைய சூழலில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் முழுவதுமாக கவனம் செலுத்தி நாகரீகம் முறையில் ஏராளாமான செயல்களை செலவழித்து வரும் பட்சத்தில் மாணவிகளை வித்யாசமாக அவர்களது கவனத்தினை கொண்டு செல்லுதல் விதமாக இந்த போட்டிகள் நடைபெறுவதாகவும், இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு முழுக்க, முழுக்க மட்பாண்டங்களால் ஆன பானைகள் மற்றும் பொருட்கள் மட்டுமே தான் கொடுக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில், இன்றுவரை அந்த மாதிரியான விளையாட்டு போட்டிகளை இது தான் முதன்முறையாக விளையாடுவதாகவும், தனது பாட்டி காலத்தில் விளையாடப்பட்ட இந்த விளையாட்டுகளை தாங்களும் விளையாடுவது இதுவே முதல் முறை என்று கூறிய மாணவிகள், அந்த மாணவிகளுடனே, கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியைகள் உள்ளிட்டவர்களும் இணைந்தே இது போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த கல்லூரியின் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.