திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (15:43 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு !

தமிழக முதல்வராக ஸ்டாலின் கடந்த மே 7 ஆம் தேதி  பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். மோடியுடனான சந்திப்பில் நீட் தேர்வு ரத்து, தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஆகியவை பற்றி பேச உள்ளாராம்.

இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய அரசு ஸ்டாலினுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், வரும் ஜூன் 17,18,  ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி ஆபரேஷன் மாஸ்கா என்ற திட்டத்தை என்பதை செயல்படுத்த இருக்கிறார்.

அதேசமயம், வரும் 2024 ஆம் ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலை அடிப்படையாக வைத்து முதல்வர் ஸ்டாலினுக்கு மோடி சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்துக் கவுரவித்துள்ளதாகவும், தமிழகத்தில் பாஜக வலுவாகக் காலூன்ற பாஜக திமுகவுடன் இப்படி ஒரு நட்பு உறவு கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு ஸ்டாலினுக்குத்தான் இந்த மரியாதை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.