புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (12:01 IST)

அசல் ஓட்டுனர் உரிமம் எப்போது அவசியம் தெரியுமா?

இன்று முதல் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.


 

 
எனவே, எப்போதும் தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டுமா? அதை தவற விட்டு விட்டாலோ அல்லது தொலைந்து போய்விட்டாலோ, மீண்டும் அசல் உரிமத்தை வாங்குவதற்கு கஷ்டப்பட வேண்டுமே என பலருக்கும் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சில  காரணங்களுக்காக மட்டுமே வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமத்தை பரிசோதிப்போம் என தமிழக போலீசார் தெளிவு படுத்தியுள்ளனர். அவை பின்வருமாறு :
 
1. அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல்
2. அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல்
3. குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
4. போக்குவரத்து சிக்னலில் எல்லையைத் தாண்டுதல்
5. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல்
6. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல்
 
என இதுபோன்ற விதிமீறல்கல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடும்போது  மட்டுமே அவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என சென்னை நகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.