வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (09:59 IST)

சென்னைக்கு மிக அருகி... தண்ணீர் தேங்கி ஏரியாகிய ரியல் எஸ்டேட் லாண்ட்!!

செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் மனை தண்ணீர் தேங்கி ஏரியாக மாறியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
சென்னைக்கு மிக அருகில், 10 நிமிடத்தில் ஏர்போர்ட் என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படும் ரியல் எஸ்டேட் மனை ஒன்று தற்போது ஏரி போல காட்சியளிக்கிறது. 
 
ஆம், செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஒழ்த்தூர் என்ற ஏரியை ஒட்டிய பகுதி மனைகளாக விற்பனைக்கு வந்துள்ளது. அந்த இடம் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி ஏரி போல காட்சியளிக்கிறது. 
 
ஏரியின் அருகே இருப்பதால் இந்த விற்பனைக்கு வந்த மனை பகுதியும் ஏரியாய் இருந்திருக்ககூடும் என மக்கள் சந்தேகிக்கின்றன. இந்த வீட்டு மனை குறித்த கேள்விகளுக்கு விளக்கம் கேட்ட போது நகர ஊரமைப்புகள் முறையான பதில் தரவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.