செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (21:36 IST)

PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு

பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர  வேறு எந்த வங்கி  செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது பேடிஎம் நிறுவனம்.

இந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், பேடிஎம் நிறுவனம்  அதன் பேங்கிங்-ன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதில், பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து, விதிமீறல் ஈடுபட்டு வருவதாக கூறி, ரிசர்வ் வங்கி , 'இனிமேல் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர  வேறு எந்த வங்கி  செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது' என திட்டவட்டமாக  தெரிவித்துள்ளது.