கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷனில் பொருட்கள்
ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொருட்களை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளாதாக தகவல் வெளியாகிறது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது.
தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா பாதிப்பு குறைந்து வருகிறது.இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்கும் வகையில்,மட்டுமே பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ரேசன் கடைகளில் சோதனைகளின் போது முதல் முறை சிக்கினால் எச்சரிக்கை விடப்படும். மீண்டும் தடுப்பூசி போடாதது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்