1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (08:51 IST)

சுவாதியை கொலை செய்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமாரை காவல் துறையினர் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்தனர்.


 
 
10 தனிப்படை வைத்து இந்த வழக்கை விசாரித்து வந்த காவல் துறை சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று கொலையாளியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளி ராம்குமார் சூளைமேட்டில் உள்ள A.S.மேன்சனில் தங்கி இருந்தது தெரியவந்தது.
 
மேன்சனில் இருந்து ராம்குமார் பற்றி காவல் துறை, ராம்குமாரின் சொந்த ஊருக்கு விரைந்தது. நேற்று காலை முதலே கொலையாளி ராம்குமாரை காவல் துறையினர் நோட்டமிட்டு வந்தனர்.
 
சுவாதியை கொலை செய்துவிட்டு மறுநாளே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் ராம்குமார். நேற்று மாலை 6 மணியளவில் ராம்குமார் தனது சொந்த ஊரான தேன்பொத்தை ஊராட்சியை சேர்ந்த சுப்பிரமணியபுரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததை காவல் துறையினர் நோட்டமிட்டனர்.
 
ஆனால் காவல் துறை அவசரப்படாமல் அனைவரும் தூங்கிய பிறகு இரவில் கைது செய்யலாம் என காத்திருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் அவரது வீட்டை சுற்றிவளைத்து ராம்குமாரை கைது செய்தனர்.