திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:48 IST)

இன்று ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் கோவில் நிர்வாகிகள் முக்கிய அறிவிப்பு..!

இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தவாரி கடற்கரைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க வருட கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரை தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள உள்ளார்.

மேலும் 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில் பகல் ஒரு மணி வரை நடை சாத்தாமல் பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று ராமேஸ்வரம் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு 9 மணிக்கு பிறகு தான் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
நாளை எட்டாவது நாள் மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் அம்பாள் புறப்பட்டு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மாலை 4 மணியிலிருந்து இரவு வரை நடை திறக்கப்படும் என்றும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புகளால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva