திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (11:14 IST)

சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்திற்கு எந்த பாதிப்பும் வராது - மத்திய அரசு

சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் அகற்றப்படாது என்று ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திரம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 
திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்ற இருந்த சேது சமுத்திரம் திட்டத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அரசும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சேது சமுத்திரம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ராமர் பாலம் சேதமடையும் என்று காரணம் கூறி வந்தனர்.
 
ஆனால் சிலர் அது செயற்கையான பாலம் அல்ல இயற்கையாக இருந்ததுதான் என்று கூறி வந்தனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெகு நாட்களாக நடந்து வந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது.  
 
இந்நிலையில் தற்போது சுப்பிரமணியன் சுமானி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, சேது சமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் அகற்றப்படாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 
மேலும், ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திரம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளது.