ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:44 IST)

மூக்கையா தேவர் எங்க பெரியப்பாதான்.. ஓபிஎஸை எதிர்த்து போட்டியிடும் ஓபிஎஸ் பேட்டி..!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து 5 ஓபிஎஸ் போட்டியிடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இவர்களில் சிலர் ஊடகங்களில் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அவர்கள் கூறிய சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை வாகைகுளம் என்ற பகுதியை சேர்ந்த ஓபிஎஸ் கூறியபோது ’நான் பாரம்பரியமாக அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் கச்சத்தீவை தாரை வார்க்கும் போது எனது பெரியப்பா மூக்கையா தேவர் தான் அதை நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேசினார் என்றும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற லட்சியத்தில் போட்டியிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கங்கை கொண்டான் என்ற பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கூறிய போது ‘நாங்கள் பரம்பரையாக அரசியல் கட்சியில் ஈடுபட்டு சேவை செய்து வருகிறோம், என் தந்தை அரசியல் கட்சியில் இருந்தார், இப்போது எனக்கும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

மதுரை சோலை அழகுபுரம் என்ற பகுதியை சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் நான் எந்த கட்சியை சேர்ந்தவன் இல்லை, ஓபிஎஸ்ஐ எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று எண்ணம் எனக்கு இல்லை, என்னை போன்ற சுயேட்சைகளை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பார்ப்பதற்காக தான் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் எதிர்த்து போட்டியிடும் மூன்று ஓபிஎஸ்கள் பேட்டியளித்தாலும் மற்ற இருவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்பது தான் உண்மையாக உள்ளது.

Edited by Siva