வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (09:17 IST)

சொந்தமா ஆக்ஸிஜன் உற்பத்தி இல்ல.. வெளிலதான் வாங்குறோம்! – ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் விளக்கம்!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதி உள்ளதாக வெளியான தகவல் குறித்து மருத்துவமனையின் டீன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மருத்துவமனைகள் தேவையான ஆக்ஸிஜனை தனியார் நிறுவனங்களிடமே வாங்கு வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சொந்தமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாக சமூக வலைதளங்களில் புரளி பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் “சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை. தனியார் நிறுவனத்திடம்தான் தினந்தோறும் ஆக்ஸிஜன் பெறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது” என கூறியுள்ளார்.