புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (19:27 IST)

எச்.ராஜாவுடன் ரஜினி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது கடந்த சில வருடங்களாக பாஜக சாயம் பூசப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தான் பாஜக ஆதரவாளர் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார் 
 
தன்மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாது என்று அவர் கொடுத்த ஒரே ஒரு பேட்டியில் மூலம், தான் தனித்தன்மை உள்ளவர் என்பதை அவர் தெளிவாக கூறி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று திடீரென எச்.ராஜாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்தார். எச்.ராஜாவின் மகள் திருமணத்திற்கு ஏற்கனவே ரஜினியிடம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் எச்.ராஜாவை சந்தித்தார் என்றாலும் இருவரும் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்த ஒருசில பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களில் ஒரு சிலரை பாராட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது