வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (12:36 IST)

பட்டுனு கால்ல விழுந்த ரஜினி: இத யாருமே எதிர்ப்பார்க்கல...

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு விழாவில் கலந்துக்கொண்ட போது மூத்த அரசியல்வாதி குமரி அனந்தனின் காலில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து மக்களிடம் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும், அந்த புரட்சி வெடிக்கும் என்று தான் நம்புவதாகவும் அந்த சமயத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். 
 
இந்நிலையில் ரங்கராஜ் பாண்டேவின், சாணக்கியா சேனல் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது: நான் ஒரு புள்ளி போட்டேன். அந்த புள்ளி இப்போது சூழலாக மாறி உள்ளது. அதை அலையாக மாற்ற இந்த ரஜினிகாந்த் வருவான். ரஜினி ரசிகர்களும் வருவார்கள். தேர்தல் நெருங்க நெருங்க அந்த அலை சுனாமியாக மாறும் என்று கூறினார்.
மேலும் தேர்தல் அரசியல் சுனாமி ஏற்படுத்துவது ஆண்டவன் கையில் இருக்கிறது என்றும் மக்களாகிய நீங்கள் தான் ஆண்டவன் என்றும் அந்த அற்புதம் அதிசயம் நிச்சயம் நிகழும் என்றும் கூறினார். மேலும் எல்லார் பேச்சையும் கேட்கிறவனும் உருப்பட மாட்டான். யார் பேச்சையும் கேட்காதவனும் உருப்பட மாட்டான் என்றும் தெரிவித்தார். 
 
இதனிடையே, விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இவ்வாறு செய்வார் என யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் பலருக்கு இது வியப்பை ஏற்படுத்தியது.