வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 9 நவம்பர் 2016 (09:26 IST)

புதிய இந்தியா பிறந்துள்ளது: மோடியை பாராட்டிய ரஜினி!

புதிய இந்தியா பிறந்துள்ளது: மோடியை பாராட்டிய ரஜினி!

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுகிறது. நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி இந்திய அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இன்று முதல் இந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது. அதற்கு பதிலாக புதிய வடிவிலான 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.


 
 
தங்கள் கையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 
அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. பொதுவாக சாதாரண அடித்தட்டு குடிமக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடியை பாராட்டியுள்ளார். புதிய இந்தியா பிறந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.