வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (18:36 IST)

மோடியின் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் பங்கேற்ற ரஜினி !

இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். 
இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். 
 
தற்போதுடெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்நிலையில் இன்று மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் யார்? யார் இடம் இடம்பெறுவார்கள் என்பது குறித்த அரசியல் பரபர்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது.
 
இந்நிலையின் இன்று மாலை 7 மணி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடி பாரதப்பிரதமராக பதவியேற்கும் விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
 
இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்,தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் உற்சாகத்துடன் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.