புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (19:10 IST)

எதிர்க்கும் குடும்பம் - அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அவரின் குடும்பத்தினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.


 

 
கடந்த மாதம் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது பற்றி சூசமாக தெரிவித்தார். அதிலிருந்து அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே ஊடகங்களின் விவாத பொருளாக மாறிவிட்டது.  
 
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் எனவும், ஜூலை மாதம் அவர் முக்கிய அறிவிப்பார் எனவும் அவரின் சகோதரர் சத்யநாரயணாவும் கூறியிருந்தார். தற்போது ரஜினி ‘காலா’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.  
 
மேலும், முன்பு போல் இல்லாமல், இந்த முறை அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என அவரின் நெருங்கிய வட்டாரங்களும் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அரசியலுக்கு வருவது பற்றி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தன்னுடைய நலம் விரும்பிகள், நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரிடம் அவர் ஆலோசனை செய்து வருகிறார். 
 
ஆனால் இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதையேதான் அவர் ஊடகங்களில் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால், ஊடகங்களும்,பத்திரிக்கைகளும் அவர் அரசியலுக்கு வருகிறார் என செய்தி வெளியிட்டு வருகின்றன.
 
இந்நிலையில், அவர் அரசியலுக்கு வருவதை அவரது குடும்பத்தினரே விரும்பவில்லை எனத்தெரிகிறது. ஏனெனில், ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்ந்து உடல் நலம் தேறி வந்தார் ரஜினி. அதன் பின்பு படங்களில் நடித்து வந்தார். அதுவும் அவரின் உடல் நலம் பாதிக்காத வகையில்தான் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இதில் அவரின் குடும்பத்தினர் கவனமாக இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், அரசியலுக்கு சென்றால் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். பல்வேறு ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து, மேடைகளில் பேச வேண்டியிருக்கும். இது அவரின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க வாய்ப்பிருக்கிறது என அவரின் மனைவி மற்றும் இரு மகள்களும் கருதுகிறார்களாம். மகள்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.