அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம்தான்: ரூ.1 கோடி விவகாரம் குறித்து ராஜேந்திர பாலாஜி!
அதிமுக பிரமுகர். கே.பி முனுசாமி சமீபத்தில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் பெற்றதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஆடியோ வெளியிட்ட நிலையில் அரசியலில் பணம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் பத்திரிகையாளர் முன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் எம்எல்ஏ சீட்டுக்காக கேபி முனுசாமி ரூபாய் ஒரு கோடி கேட்டார் என்று இருந்த தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி அளித்த போது ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியீட்டு ஆடியோ உண்மையாக இருக்கலாம். ஆனால் எம்எல்ஏ சீட்டுக்காக தான் கேபி முனுசாமி ரூபாய் ஒரு கோடி கேட்டார் என்பதில் உண்மை இல்லை. அரசியலில் கொடுக்கல் வாங்கல் சகஜம், இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது என்று தெரிவித்தார்.
Edited by Siva