தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா:
கொரோனா வைரஸால் கடந்த சில வாரங்களாக அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒருசில அமைச்சர் உள்பட மொத்தம் 16 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் மட்டும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கபாண்டியன் எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் எம்எல்ஏவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது