தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை,ஈரோடு, நீலகிரி சேலம் , திருப்புர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் , சித்தார், தென்காரி ஆகிய பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.