வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:03 IST)

சட்டென மாறியது வானிலை..அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கை..!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் இன்று காலை வெளியான வானிலை அறிக்கையில் கூட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்ட நிலையில் அடுத்த ஏழு நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வட தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran