வியாழன், 6 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 மார்ச் 2025 (09:48 IST)

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Rain
தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி முதல் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், இன்றும் அதே போல் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் மார்ச் 9ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால், அதே நேரத்தில் மார்ச் 10, 11 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டாலும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva