1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:52 IST)

போராட்டத்தில் ராகவா லாரன்ஸ் பங்கு கொண்டது சரி - வெப்துனியா வாசகர்கள் கருத்து

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கு கொண்டதில் தவறு ஏதுமில்லை என வெப்துனியா வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

 
எந்த தலைமையும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுகூடி, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்க வந்த சில அரசியல்வாதிகளை மாணவர்கள் அனுமதிக்கவில்லை. நடிகர்களும் வர வேண்டாம் என அவர்கள் கூறியிருந்தனர். 
 
ஆனால், அவர்களின் போராட்டத்தை பங்கு பெற நடிகர் லாரன்ஸை மற்றும் அவர்கள் அனுமதித்தனர். அவர் சமூகத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பதால் அவரை மட்டும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், போராட்டத்தை போலீசார் கலைப்பதற்கு முதல் நாள் இசையமைப்பாளர் ஆதி மற்றும் லாரன்ஸ் போன்றவர்கள் மாணவர்களுக்கு தலைவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டனர் என்றும், அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்தனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக நமது வெப்துனியா வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லாரன்ஸை உள்ளே விட்டது என்ற போராட்டக்காரர்களின் கருத்து சரிதான் என 39.3 சதவீத பேரும், போராட்டக்காரர்களின் கருத்து தவறானது, அதாவது லாரன்ஸ் பங்கு கொண்டது சரிதான் என 50.45 சதவீத பேரும், கருத்து இல்லை என 10.25 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.