Daily Horoscope
✕

தீபாவிற்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும் - ராதாரவி நக்கல்

Updated: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:53 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற மாட்டார் என நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
 
இந்நிலையில் அவரின் வெற்றி வாய்ப்பு பற்றி நடிகர் ராதாரவி ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
அவர் அரசியலுக்கு வருவார்னு நான் எதிர்பார்த்தேன். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 150 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் விஷால் அணி வெற்றி பெற்றது. ஆர்.கே.நகரில் 3 லட்சம் ஓட்டுக்கள் இருக்கிறது. அவர்கள் எப்படி விஷாலுக்கு ஓட்டு போடுவார்கள்?
 
திமுக, அதிமுக வேட்பாளர்கள் பேசினால் மக்கள் கேட்பார்கள். விஷால் பேசினால் வந்து பார்ப்பார்கள் அவ்வளவுதான். ஆர்வக்கோளாறில் இப்படியெல்லாம் செய்கிறர். ஆர்.கே.நகரில் தீபாவுக்கு என்ன நிலையோ அதுதான் விஷாலுக்கும்” என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

திருமாவும் விஜய் ஆட்சியில் நீடிப்பதை விரும்பவில்லையா? இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?

அதிகரிக்கும் அரிசி விலை!.. விரைவில் ஒரு கிலோ 100-ஐ எட்டும்!.. அதிர்ச்சியில் மக்கள்!..

ரூ.20,000 கோடிக்கும் மேல் இழப்பு.. திமுக ஆட்சியின் அரசாணையை திரும்ப பெற்ற தவெக அரசு...

600 கோடி சொத்து காண்பித்த விஜய், 20 லட்சத்தை ஏன் மறைக்க போகிறார்.. நீதிபதி கேட்ட கேள்வி..

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments