பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் பொன்முடி பொறுப்பை பறித்த துரைமுருகன்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார் என்பதும், துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ ராசா மற்றும் பொன்முடி பதவியேற்றுக் கொண்டனர் என்பதும் திமுகவின் பொருளாளராக டிஆர் பாலு அவர்கள் பொறுப்பேற்று கொண்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக உத்தரவு ஒன்றை துரைமுருகன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி திமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடியின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி அவர்கள் ஏற்கனவே திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதிஅ அடுத்து அவர் மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார் என்று துரைமுருகன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி விலகியதை அடுத்து தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளராக புகழேந்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புகழேந்தி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடதக்கது அதுமட்டுமின்றி இவர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் என்றும் அவருக்காக ரசிகர் மன்றத்தை தொடங்கினர் என்றும் கூறப்படுகிறது
உதயநிதிக்கு நெருக்கமானவர் மாவட்ட செயலாளர் பதவியை பிடித்துள்ளது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது