வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (12:29 IST)

மூன்றாம் அலை எச்சரிக்கை; டோரா, மிக்கி மவுஸுடன் குழந்தைகள் வார்டுகள்!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் மூன்றாவது அலை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டை டோரா, மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் படங்களை கொண்டு அலங்கரித்துள்ளனர். குழந்தைகள் மனதை உற்சாகப்படுத்த இந்த கார்ட்டூன் படங்கள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.