புதுவை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!

university
புதுவை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!
siva|
புதுவைப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது புதுவை பல்கலை கழகத்தில் செமஸ்டர் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
இது குறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வுத் துறை கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ள அறிவிப்பின்படி புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த தேர்தல் ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தேர்வு தேதி குறித்த அட்டவணைகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாகவும் மாணவர்கள் அதை பார்த்து தெரிந்து கொண்டு தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்த தேர்வு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



இதில் மேலும் படிக்கவும் :