புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (08:11 IST)

புதுவையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்!

புதுவையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக புதுவையில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று முதல் புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்ற கடிதம் வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.