திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2017 (23:15 IST)

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.வை பாராட்டி கட்-அவுட் வைத்த பொதுமக்கள்

சசிகலா ஆட்சி அமைப்பதா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அமைப்பதா என்ற அரசியல் பரபரப்பு நிலவிவரும் வேளையில், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

 
இதுபற்றி ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறும்போது, ”மற்றவர்கள் பதவியை காப்பாற்றி கொள்வதற்காக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தருவதில் திட்டவட்டமாக இருக்கிறேன்.
 
எக்காரணத்துக்காகவும் இதிலிருந்து மாற மாட்டேன். நான் கடைசி வரை பன்னீர்செல்வத்துடன் தான் இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே சசிகலா முதல்வர் ஆவதில் வெறுப்படைந்த நிலையில், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வின் இந்த அதிரடி முடிவுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியின் பல்வேறுப் பகுதிகளில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வை பாராட்டி கட்-அவுட்டுகள், போஸ்டர்கள், வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. வீட்டிற்கே சென்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.