திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:58 IST)

போக்குவரத்து சிக்னலை காணவில்லை என வாகன ஓட்டிகள் குழப்பம்!

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னலை மறைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் சிக்னல் எங்கே என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம்
 
தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ள நேரு சிலை சந்திப்பில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு வாகனங்களின் போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்து வருகின்றனர் 
 
தேனி நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய சந்திப்பாக இந்த நேரு சிலை பகுதி இருந்து வருகிறது,கேரள மாநிலம் செல்லும் வாகனங்களும் கேரளாவில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு  செல்லக்கூடிய வாகனங்கள் பெரும்பாலும் இந்த சந்திப்பை கடந்து தான் நிலை உள்ளது
 
இந்நிலையில் தேனி நேரு சிலை பகுதியில் கம்பம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரு சிலை பகுதியில் இருந்த சிக்னல் தற்போது எங்கே என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கின்றனர்
 
மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக  ஊர்களின் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அந்த அறிவிப்பு பலகை போக்குவரத்தை சீர் செய்ய அமைக்கப்பட்ட சிக்னல்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழம்பிப் போய் நிற்கின்றன இதனால் சிக்னல்கள் விழுவது தெரியாமல் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.