செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:00 IST)

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர சம்மதம், ஆனால்...: நிதியமைச்சர் பிடிஆர்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி பொருட்கள் கொண்டு வர வேண்டும் என கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார். ஆனால் தற்போது அவர் முதல்வர் ஆகியுள்ள நிலையில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசலை கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மாநில அரசின் வருவாய் பாதிக்கப்படும் என்று கூறிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தற்போது ஒரு நிபந்தனை விதித்துள்ளார் 
 
செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசலை கொண்டுவர தமிழ்நாடு சம்மதம் என்று கூறியுள்ளார். மாநில வருவாயை மத்திய அரசு எடுத்துக் கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்திற்கு பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானத்தில் இருந்து மட்டுமே வரி வருவாய் கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்