1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (20:08 IST)

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவு

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு   தனியார் நிறுவனங்கள் மூலம்  குத்தகை முறையில்  ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் பணிமனைகளில் இருந்து மீண்டும் வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அளித்த அறிவுறுத்தலின்படி உடனடியாக பேச்சுவார்த்தையை  தொடங்குகிறோம் என்று, அனைத்து தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வர ஒப்புக்கொண்டனர் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இதையடுத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு, பேருந்துகளை இயக்கை தொடங்கினர். இதனால், மக்கள் வீட்டிற்கு திரும்புதல் எளிதாகியுள்ளது.