1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (16:53 IST)

தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.! சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

Modi
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தற்போது அவர் பங்கேற்று உள்ளார்.
 
அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். தனி விமான மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு சென்றார்
 
அங்கு, கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
 
இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமரின்  வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை இன்று பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.